Advertisements

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழகத்தின் தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவருமான மருத்துவர் ராமதாஸ் சுசிலா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த விவகாரம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது . இணையதளங்கள் முழுவதும் மருத்துவர் ராமதாஸின் இரண்டாவது திருமணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
மருத்துவர் ராமதாஸுக்கு இரண்டு மனைவிகள் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது . சென்னை மகாபலிபுரத்தில் திமுக எம் பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக ஒரு நட்சத்திர விடுதி இருக்கிறது இங்கு தான் சமீபத்தில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் சுசிலாவின் ஐம்பதாவது ஆண்டு திருமண விழா நடைபெற்றுள்ளது .
மருத்துவர் ராமதாஸுக்கு சரஸ்வதி அம்மாள் என்பவர் மனைவியாக குடும்பம் நடத்தி வருகிறார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் ஆனால் யார் இந்த சுசீலா என்பது புரியாத புதிராக இருக்கிறது . மருத்துவர் ராமதாஸ் ஆரம்ப காலங்களில் திண்டிவனம் பகுதிகளில் மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவைகள் செய்து வந்தார். ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கு அவருடைய மருத்துவ சேவை நடைபெற்று வந்தது .
அந்த காலகட்டத்தில் அவரது மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தவர் தான் சுசீலா அப்பொழுது சுசிலாவுக்கு 16 வயது இவரை டோக்கன் ஆயா என்று அழைப்பார்கள் அதாவது மருத்துவர் ராமதாசை பார்க்க வரும் நோயாளிகளுக்கு டோக்கன் கொடுப்பதுதான் சுசீலாவின் பணி
டோக்கன் கொடுப்பது தவிர சுசிலா மிகவும் உற்சாகமான பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது . இது தவிர தினமும் மருத்துவர் ராமதாசை அவரது வீடு வரை அழைத்து வந்து விட்டு அதன் பிறகு தான் சுசீலா தனது வீட்டுக்கு திரும்புவார்
இந்த நிலையில் சுசிலா மீது மருத்துவர் ராமதாஸுக்கு ஒருவித அன்பு ஏற்பட்டது . இதன் தொடர்ச்சியாக சுசிலாவுக்கு 18 வயது இருக்கும் பொழுது மருத்துவர் ராமதாஸ் சுசிலா திருமணம் நடைபெற்று விட்டதாக சொல்கிறார்கள் .
யாருக்கும் தெரியாமல் நடைபெற்ற இந்த திருமணம் மருத்துவர் ராமதாஸ் வீட்டுக்கு தெரிய வந்த பிறகு குடும்பத்தில் ஏராளமான சண்டைகள் நடைபெற்று இருக்கின்றன . பிறகு காலப்போக்கில் அனைவரும் இது குறித்து பேசாமல் அமைதி காத்து விட்டனர் , கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் ராமதாஸ் சுசீலா இல்லற வாழ்க்கை பற்றி வெளியே யாருக்கும் தெரியாமல் இருந்தது. இருந்தபோதிலும் அரசியலில் சில முக்கியஸ்தர்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இந்த விஷயம் தெரிந்து தான் இருக்கிறது .
சுசிலாவிற்கு மாதம் தோறும் 25 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளார் ராமதாஸ் .இது தவிர அவ்வப்போது ஏராளமான அளவில் பணமும் செலவழித்து வந்திருக்கிறார் . பல சொத்துகளும் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் குடும்பச் சண்டை பாட்டாளி மக்கள் கட்சி சண்டையாக மாறியது என்கிறார்கள் . சுசிலா குறித்து சௌமியா அன்புமணி அன்புமணி ஆகியோர் தட்டி கேட்டபோதுதான் பிரச்சனை வெடித்து தற்பொழுது அது பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடையும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
சென்னை மாமல்லபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் சுசிலா ஐம்பதாவது ஆண்டு திருமணம் நடைபெற்ற போது சுசிலா கழுத்தில் ராமதாஸ் மீண்டும் புது தாலி அணிவித்திருக்கிறார் . இந்த தாலியை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஏகே மூர்த்தி தான் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். இது மட்டுமல்லாமல் இந்த 50 ஆம் ஆண்டு திருமண விழாவை முன்னின்று நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சிஎம்எல்ஏ அருள் என்று சொல்கிறார்கள் .
இந்த திருமணத்தில் சுசிலா குடும்பத்தினர் உள்பட 200 பேர் கலந்து கொண்டுள்ளனர் . விருந்தும் நடைபெற்றுள்ளது ஆனால் மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை . இந்த திருமண நிகழ்வு நடைபெற்ற போது அனைவரது செல்போன் சுவிட்ச்சுகளும் அணைக்கப்பட்டு இருந்தன. இருந்த போதிலும் இதனை யார் படம் எடுத்தது தற்பொழுது இதனை யார் வெளியிட்டது என்பது தெரியவில்லை .
ஒருவேளை இது சுசீலாவின் கை வேலையாக இருக்கலாம் என்கிறார்கள் தன்னை பற்றி வெளி உலகத்தில் தெரிய வேண்டும். என்பதற்காகவே சுசிலா திட்டமிட்டு இதனை அரங்கேற்றி உள்ளதாக சொல்லப்படுகிறது . சமீப காலமாக மருத்துவர் ராமதாஸின் அரசியல் வாழ்க்கையிலும் சுசிலா தலையிட்டு வந்துள்ளார் . இதுவும் அன்புமணிக்கு இடையிலான மோதலுக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது . இந்த நிகழ்வுகள் குறித்து மருத்துவர் ராமதாஸ் இதுவரை எந்த விளக்கமும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements



