டிடிஎப் வாசனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்படுத்தி தனக்குத்தானே காயம் ஏற்படுத்தி கொண்ட வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு 4 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு இருந்தது. அவரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 5-வது முறையாக ஜாமீன் கோரி டிடிஎப் வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிபந்தனையுடன் ஜாமீன்வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று வாரம் சமந்தப்பட காவல் நிலையத்தில்தினமும் கையெழுத்து போடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிவேகமாக பைக்கை இயக்கி விபத்தை ஏற்படுத்திய டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

