டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று தொடக்கம் !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவுகளைச் சேர்ந்த 846 பணியிடங்களை நிரப்புவதற்காகத்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் முதல்நிலைத் தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் ஆயிரத்து 647 மையங்களில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 4 இலட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் எழுதவுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 173 தேர்வு மையங்களில் 51 ஆயிரத்து 721 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் 200 கொள்குறி வகை வினாக்கள் இடம்பெறும். மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *