ஹமில்டனில் இன்று 5-வது டி20 – இந்தியா vs நியூசிலாந்து மோதல்!

ஹமில்டன் நகரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில், நான்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற நிலையில், மூன்று போட்டிகளில் இந்திய அணியும், ஒரு போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், இந்திய அணி  20 ஓவர் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஹமில்டன் நகரில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான வீரர்களும், நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர். எனவே இன்றைப் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டம் தொடருமா? என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *