சினிமாவை விட அதிகம் பணம் சம்பாதிக்க விஜய் அரசியலுக்கு வந்துள்ளாரா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வினவியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் அதிமுகவின் 55ஆவது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தவெக ஆட்சி அமைந்த இந்த 6 மாதத்தில் மக்களுக்குக் கிடைத்தப் பரிசு விலைவாசி உயர்வு எனத் தெரிவித்தார். தவெக ஆட்சியில் அரிசு, பருப்பு என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியில் அரசு அலுவலகங்களில் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள், இப்போது, 10 ரூபாய் வாங்கப்படுகிறது என்று கூறினார். சினிமாவை விட அதிகம் பணம் சம்பாதிக்க விஜய் அரசியலுக்கு வந்துள்ளாரா? என்று வினவினார். மேலும் சிலர் வேடந்தாங்கல் பறவைகளைப்போல் சீசனுக்கு ஏற்றாற்போல் கட்சி மாறுவர்கள், அவர்களைப்பற்றி கவலை இல்லை என்று கூறியுள்ளார்.


