நிவாரணம் நிதி வழங்கியது மத்திய உள்துறை !

Advertisements

சென்னை :

புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, நேற்று தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, 2,000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து, முதல்வரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு விபரங்களைக் கேட்டறிந்தார்.

இந்நிலையில், தமிழக புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அமைச்சகத்தால் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மத்திய உள்துறை இணை செயலர் ராஜேஷ்குப்தா தலைமையில், மத்திய வேளாண் துறை எண்ணெய் வித்துக்கள் மேம்பாட்டு பிரிவு இயக்குனர் பொன்னுசாமி, நிதித்துறையின் செலவினங்கள் பிரிவு இயக்குனர் சோனாமணி ஹோபம், மத்திய நீர்வள ஆணைய, சென்னை மண்டல இயக்குனர் சரவணன்.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக சென்னை மண்டல செயற்பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய மின்சார துறை உதவி இயக்குனர் ராகுல் பச்கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி உள்ளிட்ட, ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை வந்துள்ள இக்குழுவினர், நேற்று மாலை முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத பாதிப்புகுறித்த அறிக்கையை, குழுவிடம் முதல்வர் வழங்கினார்.

அதில் நிரந்தர ம்றறும் தற்காலிக மறு சீரமைப்பு பணிகளுக்காக 6,675 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, இன்று முதல் மூன்று குழுவாகப் பிரிந்து சென்று, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

தமிழகத்தில் ஆய்வை முடித்து, புதுச்சேரி மாநிலத்திலும் சில பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளனர்.

இதற்கிடையே, தமிழகத்திற்கு முதற்கட்ட நிவாரணமாக, 944.8 கோடி ரூபாயை வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது.

மத்திய குழு ஆய்வுக்குப் பின், கூடுதல் நிவாரண நிதி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *