Kalaignar Magalir Urimai Thittam: சொன்னதைச் செய்த தமிழக அரசு!

கலைஞர் உரிமைத் திட்டம்! சொன்னதைச் செய்த தமிழக அரசு…

கடந்த 2021 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியின்போது திமுக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது.அதில் நல்ல பல திட்டங்கள் சொல்லபட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி கட்டிலில் அமர்ந்த திமுக அரசு, முதன் முதலாக மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் அமலுக்கு கொண்டு வந்தது. இத்திட்டம் மகளிரிடையே பெரும் வரவேற்பை பெற்று இன்று வரை மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அடுத்ததாக ஆரம்ப பள்ளிகளில் சத்தான காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு , செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமும் மாணவர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியாக ஒவ்வொரு வாக்குறுதிகளும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நமது தமிழக அரசு, மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததை, சொன்னபடியே அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டெம்பர் 15-ம் தேதி வழங்கும் பொருட்டு, முன்னெடுப்பு நடவடிக்கைகளை மாவட்டந்தோறும் செயல்படுத்தி, அதற்கான விண்ணப்பங்கள் மகளிரிடம் பெறப்பட்டு, தகுதியான மகளிர் தேர்வு செய்யப்பட்டு, செப்டெம்பர் 15-ந் தேதி, முதல்வர் அவர்களால், அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சி மண்ணில் தொடங்குகிறார்.

இதற்கு முன்னோட்டமாகச் செப்டெம்பர் 14-ஆம் தேதியே ஒரு ரூபாய் மகளிர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்டெம்ப்ர் 15 -ஆம் தேதி காலை 10 மணிக்குள் தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கு 1000 ருபாய் உரிமைத் தொகை செலுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சொன்னதை செய்வொம்… சொல்லாததையும் செய்வோம். சொன்னதை செய்து விட்டார்கள் சந்தோசம் தானே…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *