Suicide: காதலன் உயிரிழந்த சோகத்தில் காதலி தற்கொலை!

Advertisements

குடியாத்தத்தில் காதலன் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் காதலி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தில் சுப்பிரமணி தேவா தம்பதியினர் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.இவருக்கு 16 வயது அனிதா என்ற மகள் குடியாத்தம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.சுப்பிரமணியின் தங்கை மகன் வயது 19 கடந்த 19ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்து விட்டார்.சிவாவும் அனிதாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சிவா இறந்த சோகத்தில் அனிதா தனது தோழிகளிடம் சிவா இறந்துவிட்டார் நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்க வேண்டும் என மன வருத்தத்தோடு பேசியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மதியம் வீட்டில் இருந்த அனிதா திடீரென காணவில்லை.தொடர்ந்து நான்கு நாட்களாக சுப்பிரமணி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.எங்கு தேடியும் கிடைக்காததால் நேற்று குடியாத்தம் காவல் நிலையத்தில் சுப்பிரமணி தனது மகள் அனிதா காணவில்லை என புகார் கொடுத்தார்.

இந்நிலையில் வீட்டின் அருகாமையில் ராஜசேகர் என்பவர் நிலத்திற்கு தண்ணீர் பாச்சுவதற்காக சென்றபோது கிணற்றில் பெண் சடலம் இருப்பது தெரியவந்தது.இது குறித்து குடியாத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல் துறையினர் கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது.

சுப்பிரமணியின் மகள் அனிதா என்பது தெரிய வந்தது. உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு.இதுகுறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த அத்தை மகன் விபத்தில் உயிரிழந்த சோகத்தில் தாய்மாமன் மகள் கிணற்றில் குதித்து. தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *