டெல்லியில் லேசான நிலநடுக்கம்!

Advertisements

டெல்லி என்.சி.ஆர்-இன் சில பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 எனப் பதிவாகியுள்ளது. இதனைத் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புது டெல்லியில் பூமியின் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் இன்று அதிகாலை 5:36 மணிக்கு ஏற்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *