
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 எனப் பதிவாகியுள்ளது. இது பூமியின் மேற்பரப்பிலிருந்து 5 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், பீகார் மாநிலத்தில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமும் ரிக்டரில் 4.0 எனப் பதிவாகியுள்ளது. பீகார் மாநிலம் சிவான் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் சரியாக 8.02 மணிக்கு ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
முன்னதாக, நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
