Midhili Cyclone: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது!

Advertisements

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால் அதற்கு மிதிலியெனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 20ம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கிய நேரத்தில் அரபிக்கடலில் தேஜ் புயலும், காற்றழுத்தமும் உருவானது. இதனால் கடந்த ஒருவாரமாகத் தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று உருவானது. இது ஒன்று புயலாக உருமாறி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் இன்று உருவாகி இருக்கும் புயலுக்கு மிதிலியெனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்று நாளை வங்கதேசம் அருகே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. புயலின் காரணமாக மோங்கா மற்றும் கொபுரா கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. புயல் காரணமாக மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வடமேற்கு – வடகிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், வங்கதேச கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *