MP Assembly Election: சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7மணி முதல் நடைபெகிறது!

MP Assembly Election: ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலங்கானா, மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7ம் தேதி மிசோரம் மாநிலத்துக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதே நாளில் சத்திஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.  அதன் தொடர்ச்சியாகத் தற்போது சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாநிலத்தில் 22 மாவட்டங்களில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கு மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த ராஜிம் மாவட்டத்தின் பிந்த்ரனாவாகர் தொகுதியில் மட்டும் காலை 7 மணிக்குத் தொடங்கு மதியம் 3 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சத்தீஸ்கரில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தமாக 958 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர். அதில் 130 பேர் பெண் வேட்பாளர்களாகவும், ஒருவர் திருநங்கையாகவும் உள்ளனர். மொத்தமுள்ள 18,833 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், வாக்குச்சாவடிகளில் மாநில போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக அற்றும் சுயேட்சையை சேர்ந்த 2,533 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸிற்கு அடுத்ததாகப் பகுஜன் சமாஜ் கட்சி 183 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.
அதேநேரம் சமாஜ்வாடி சார்பில் 71 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 66 வேட்பாளர்களும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *