‘கங்குவா’ படத்தின் முதல் நாள் வசூல்!

Advertisements

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்தான விவரம் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பாகவே பான் வேர்ல்டு படம் எனப் படக்குழு பில்டப் கொடுத்தது. ஆனால், படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. சூர்யாவின் நடிப்பு மட்டுமே இதில் ஆறுதலான விஷயம் எனவும் திரைக்கதையில் இயக்குநர் சொதப்பியிருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதோடு, தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் இரைச்சலாக இருப்பதாகச் சொல்லி வருகின்றனர். நடிகர் சூர்யாவின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் அதாவது ரூ. 300 கோடியில் உருவான படம் இது. இந்த நிலையில், ’கங்குவா’ படத்தின் முதல் நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ. 22 கோடி- ரூ.30 கோடி வசூல் பெற்றிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படம் ரூ.2000 கோடிவரை வசூலிக்கும் என்று எதிர்பார்ப்பதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *