Meera Nandan: குருவாயூர் கோவிலில் காதலரைக் கரம்பிடித்து நடிகை மீரா நந்தன்..!

தென்னிந்திய மொழிகளில் நடித்துப் பிரபலமான நடிகை மீரா நந்தனுக்கு இன்று காலைக் குருவாயூர் கோவிலில், குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது. இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

meera கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை மீரா நந்தன். கொச்சியில் பிறந்து, வளர்ந்த இவர், சீரியல் நடிகையாக இருந்து பின்னர் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவர் மலையாளத்தில் 2007-ஆம் ஆண்டு ஒளிபரப்பான வீடு என்கிற சீரியலில் தான் முதல் முதலாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு மலையாள படமான ‘முல்லா’ படத்தில் நடித்தார்.

2009-ஆம் ஆண்டு தமிழில் நடிகர் அகில் ஹீரோவாக நடித்த ‘வால்மீகி’ படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்தார் மீரா. ஆனால் இவர் நடித்த முதல் படமே படுத்து விட்டது. இதைத் தொடர்ந்து தமிழில் நடித்த நேர் முகம், சண்ட மாருதம், காதலுக்கு மரணம் இல்லை, சூரிய நகரம் போன்ற படங்களும் தொடர் தோல்வியைத் தழுவியது.

தமிழை, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. எனவே தொடர்ந்து மலையாள திரையுலகிலேயே அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.

நடிகை என்பதை தாண்டி, ரேடியோ ஜாக்கி, மாடல், தொகுப்பாளர் எனப் பன்முக திறமையாளராக அறியப்படும், மீரா நந்தனுக்கும் அவரின் காதலர் Beau Sreeju என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் இன்று காலை இவர்களின் திருமணம் குருவாயூர் கோவிலில் நடந்து முடிந்துள்ளது.

திருமணம், மிகவும் எளிமையான முறையில் நடந்திருந்தாலும்… வரவேற்பு பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, மீரா நந்தன் – ஸ்ரீஜு திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *