
நடிகை ஓவியா சரக்கடித்து கொண்டு, பெரிய மனதுடன் மது பிரியர்களுக்கு அட்வைஸ் கூறியுள்ளார். மேலும் இவருடைய ரீசென்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான ஓவியா, தமிழில் அறிமுகமானது ‘நாளை நமதே’ என்கிற திரைப்படம் என்றாலும், இவருக்குச் சிறந்த அறிமுகத்தைக் கொடுத்தது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில், 2010 ஆம் ஆண்டு விமலுக்கு ஜோடியாக நடித்த களவாணி திரைப்படம் தான். காமெடி கதை களத்தில் உருவான இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், யாமிருக்க பயமேன், போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள ஓவியா… தமிழ் பட வாய்ப்புகள் குறைந்த பின்னர், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். குறைந்த நாட்களிலேயே தன்னுடைய எதார்த்தமான சுபாவத்தாலும், நேர்மையாலும் பல ரசிகர்கள் மனதை கவர்ந்த ஓவியா, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வெற்றியாளராக மாற வேண்டும் என அவருக்குத் தனி ஆரம்பித்து அவரைக் கொண்டாடினர் ரசிகர்கள்.

எனினும், ஆரவ் மீது ஏற்பட்ட காதலாலும்… அவரால் ஏமாற்றப்பட்டதாலும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா, தனக்கு பயோ போலார் டிஸ்ஆர்டர் என்கிற பிரச்சனை இருப்பதாகக் கூறி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவதாகக் கூறினார். திடீரெனத் தண்ணீருக்குள் மூழ்கித் தற்கொலைக்கு முயன்றதால், அதிரடியாகப் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர், மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஓவியா வருவாரா? எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில்… பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் விருந்தினராக மட்டுமே பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகையாக மாறிய ஓவியா, மீண்டும் திரையுலகில் நல்ல இடத்தைப் பிடிப்பாரெனப் பலரும் நினைத்தனர். ஆனால் ஓவியா நடித்த 90 எம் எல், திரைப்படம் வெளியாகித் தோல்வியைச் சந்தைத்தது. அதே போல் கணேஷா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, ஓவியா விட்டார் யாரு, களவாணி 2 போன்ற படங்களில் ஓவியா கதாபாத்திரம் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் போனது.
தற்போது பாமர அங்கிள், சம்பவம், ராஜபீமா, ஆகிய படங்கள் இவருடைய நடிப்பில் தயாராகி உள்ள நிலையில், விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பில் பிஸியாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது சோசியல் மீடியாவில் சில கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் ஓவியா, தற்போது பக்கத்தில் சரக்கை வைத்துக்கொண்டு… கையில் பொறித்த நண்டைச் சைடிஷ் ஆகச் சாப்பிட்டுக் கொண்டே…’ ட்ரிங்கிங் இஸ் இஞ்சூரிஸ் டூ ஹெல்த். அதாவது குடி உடல் நலத்திற்கு கேடு என்கிற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாகி வருகிறது. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என ரசிகர்களும் தங்களின் கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

