பல்லாவரம் பகுதியில் மருத்துவ முகாம் அமைப்பு!

Advertisements

சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

Advertisements

பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்குக் கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பம்மல் பகுதியைச் சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி, மோகனரங்கன் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார். மேலும் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்த நிலையில் பல்லாவரம் பகுதியில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் பாதிக்காத வகையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *