முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை என, சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேயர் பிரியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கழக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த, முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை என்றும், திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை என்பதை மக்கள் அறிவர் என தெரிவித்துள்ளார்.
