வாட்ஸ் ஆப் செயலிக்கு விரைவில் தடை? ரஷ்ய அரசு அறிவிப்பு…!

நாடு முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியைத் விரைவில் தடை செய்யப்படக் கூடும் என ரஷ்யா அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யாவில் நாடு முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை விரைவில் தடை செய்யப்படக் கூடும் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து, ரஷ்ய மக்கள் மேக்ஸ் எனப்படும் உள்நாட்டு செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்தச் செயலியானது பயனாளர்களின் தகவல்களை ரஷ்ய அரசுக்கு வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, மெட்டா நிறுவனம் தெரிவிக்கையில், மக்களின் உரிமையை அத்துமீற ரஷ்ய அரசு முயன்றுவருவதாகக் குற்றஞ்சாடியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *