Vaiko:மதுரை கோட்டத்தைத் திருவனந்தபுரத்துடன் இணைப்பதா..!வைகோ கண்டனம்!

Advertisements

சென்னை:ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மதுரை ரெயில்வே கோட்டத்தைத் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாகத் தமிழர்களின் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்கள்வசம் செல்ல வாய்ப்புள்ளது. ரெயில்வே நிர்வாகத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்கு உரியது.

இதுகுறித்து ஏற்கனவே நான் பலமுறை ரெயில்வே அமைச்சரை நேரில் சந்தித்தும், பாராளுமன்றக் கூட்டத்திலும் வலியுறுத்தினேன். நல்ல முடிவு எடுப்பதாக அப்போது உறுதி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட தென்னக ரெயில்வே பொது மேலாளர் உடனான கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்தேன்.

அப்பொழுதும் நல்ல முடிவினை தெரிவிப்பதாகப் பொது மேலாளர் கூறினார். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரெயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *