Mark Antony: படப் போஸ்டர் வெளியானது!

Advertisements

Mark Antony | Vishal | Movie

விஷால் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது…

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மார்க் ஆண்டனி போஸ்டர் இந்நிலையில், 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மார்க் ஆண்டனி’ படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. விஷால் இரட்டை வேடத்தில் இருக்கும் இந்தப் போஸ்டரில் செப்டம்பர் 15-ஆம் தேதி ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *