Manuscript: 10.7 கோடிக்கு விற்பனை!

Advertisements

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சார்பியல் கொள்கை, பொது சார்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதி ஏலத்தில் ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது.

அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்பு சார்பியல் கொள்கையை 1905-ஆம் ஆண்டிலும், பொது சார்பியல் கொள்கையை 1915-ஆம் ஆண்டிலும் ஐன்ஸ்டீன் வெளியிட்டார். இவற்றைக் குறித்து ஜெர்மன் மொழியில் விளக்கமளித்து அவர் எழுதிய கட்டுரைகள் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த 1929-ஆண்டு பிப்ரவரி 3-இல் வெளியானது.தற்போது, அந்தப் பிரதியானது சீனாவின் ஷாங்காய் நகரத்தில் செப்.28-இல் கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏல விற்பனையில், ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது.

மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரதியில் சார்பியல் கொள்கையின் பயன்பாடுகுறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகளுடன் தொடர்புடைய இரு சமன்பாடுகள், காலம்-இடம் தொடர்புகுறித்து விளக்கும் ஒரு வரைபடம், அறிவியல் சூத்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *