Naveen-ul-Haq: திடீர் ஓய்வு அறிவிப்பு!

Advertisements

உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கடந்தாண்டு ஐபிஎல் போட்டியின்போது இந்திய வீரர் விராட் கோலியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்சையானது. அவரைக் கோலி ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணியில் அவர் இடம் பெறாமல் இருந்தார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் விளையாடவில்லை. இடம்பெறவில்லை

24 வயதான அவர். ஆப்கானிஸ்தான் அணிக்காக 2016ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடு 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.எனினும் ஐபிஎல், பிபிஎல் போன்ற தொடர்களில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வரும் நவீன், அதனைத் தொடர்வாரெனத் தெரிகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *