Sri Lanka Navy: 17 மீனவர்கள் கைது!

Advertisements

இலங்கை கடற்படை அட்டூழியம்! 17 மீனவர்கள் கைது…

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து நேற்று முன்தினம் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களைச் சுற்றி வளைத்தனர். இதில் அட்டமால் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த ஜான்சன், அருண், முருகன், கிங்ஸ்டன், கிரிட்டன், முருகன், ராரல் மானிக்ஸ், ரிமோட்டன் ஆகிய 8 மீனவர்களைச் சிறை பிடித்துக் காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினத்தை சேர்ந்த நடராஜன், கோவிந்தராஜ், சோனையன், சேப்பான், ராமகிருஷ்ணன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ரங்கய்யன், அழகிரி முருகேசன், கருப்பையா உள்பட 2 விசைப்படகுகள் மற்றும் 9 மீனவர்களையும் கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஒரே நாளில் மூன்று விசைப்படகுகள் மற்றும் 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *