மத்திய அமைச்சர்கள் பதவிகளுக்கு ஆபத்தா? மோடி அரசு அதிரடி முடிவு.!

Advertisements

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் அமைச்சரவை மாற்றவில்லை. விரைவில் அதில் மாற்றம் செய்ய இருக்கிறார். காரணம் ஏழு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கயிருக்கிறது. அதில் பெரும்பாலன மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்பவை. இதில் கிடைக்கு வெற்றிதான் 2029 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியை தீ£மானிக்க கூடியதாக இருக்கிறது. அதனால் மத்தியில் அமைச்சர்களாக உள்ள சில அமைச்சர்களை பதவியிலிருந்து இறக்கி அவர்களின் மாநிவங்களில் பாஜக வெற்றி பெற வைக்கயிருக்கிறது.

அதனால் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிக விரைவில் முக்கிய மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரபதி முர்முவை சமீபத்தில் சந்தித்து அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்புந வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், பிரதமரின் முதன்மை செயலாளருமான சக்திகாந்த தாஸ் முழுநேர கேபினட் அமைச்சராக சேர்க்கப்படலாம் என தகவல் கசிக்கின்றன.,. இப்போதுளள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மனிதவள மேம்பாட்டு துறைக்கு மாற்றப்படலாம் என்றும், தற்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டேக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படலாம். முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மீண்டும் முழுநேர கேபினட் அமைச்சராக அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளது என்கிறது டெல்லி வட்டாரம்.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதி எம்.பி. அருண் கோவில் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ராகவ் சத்தா அல்லது அசோக் மித்தல் ஆகியோரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். தற்போதைய மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு நீக்கப்பட்டு, பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் பரிந்துரைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பீகாரின் மகாராஜ்கஞ்ச் தொகுதி எம்.பி. ஜனார்தன் சிங் சிக்ரிவால் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் விஷ்ணு தத் சர்மா ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெறலாம் என்கிறார்கள்.

தற்போது மத்திய மின்சாரத் துறையை கவனித்து வரும் மனோஹர் லால் கட்டார் தனது துறையை இழக்கலாம் என்றும், மேலும் பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அடுத்தடுத்து தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் எம்.பி-க்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனப்படுகிறது.

இப்படியெல்லாம் மாற்றம் செய்து நான்வது முறையாக பிரதமராக வேண்டும் என்று கணக்கு போடுக்கிறார். மோடி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *