நடிகை தேவயானி மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா.?

பெற்றோர்களை அன்போடு பேணுங்கள், அவர்களின் பேச்சைக் கேளுங்கள் என்று நடிகை தேவயானி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மயிலாடுதுறை அருகே ஆக்கூரில் நடைபெற்ற தனியார்பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயானி கலந்துகொண்டார். திரைப்படத்தில் தான் ஆடிய பாடலுக்கு நடனமாடிய மாணவர்களுக்கு மேடையேறிச் சென்று பூங்கொத்துக் கொடுத்துப் படம் பிடித்துக்கொண்ட தேவயானி கலைநிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டு களித்தார்.

விழா மேடையில் உரையாற்றிய தேவயானி, பெற்றோர்களை அன்போடு பேணுங்கள், அவர்களின் பேச்சைக் கேளுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *