Manisha Koirala: “நடிகர்களுடன் உடலுறவு வைத்தாலும்.. நடிகைகள் பொய் தான் சொல்வார்கள்.!

Advertisements

பாலிவுட்டில் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேச மனிஷா கொய்ராலா ஒருபோதும் தயங்கியதில்லை. அந்த வகையில் 90களில் தனது திரை உலக அனுபவம்குறித்து அவர் ஓபனாகப் பேசி உள்ளார்.

பாலிவுட்டில் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேச மனிஷா கொய்ராலா ஒருபோதும் தயங்கியதில்லை. அந்த வகையில் அவர் பிலிம்பேருக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், 90களில் இந்தியத் திரையுலகில் நிலவிய பாலினப் பாகுபாடு குறித்தும், தனது மதுப்பழக்கம் மற்றும் பாய் பிரண்ட்ஸ் குறித்தும் வெளிப்படையாகப் பேசினார்.

90களில் தனது அனுபவங்களை நினைவு கூர்ந்த மனிஷா, “ 90களில் நான் கோக்கில் வோட்கோ கலந்து குடிப்பேன். ஆனால் நான் மது அருந்துவதை வெளியே சொல்ல வேண்டாம் என்று என்னைச் சுற்றி இருந்தவர்கள் சொன்னார்கள். நான் கோக் குடிக்கிறேன் என்று சொல்லச் சொன்னார்கள்.

அந்தப் புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். நான் என் அம்மாவிடம், ‘நான் கோக் குடிக்கிறேன்’ என்று சொன்னேன், நான் அதில் வோட்காவை வைத்தேன் என்று என் அம்மாவுக்குத் தெரியும். ஆனால், நீ வோட்கா குடித்தால், ஓட்கா குடிக்கிறேன் என்று சொல்.. கோக் குடிக்கிறேன் என்று சொல்ல வேண்டாம். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்குப் பொய் சொல்ல வேண்டாம் என்று என் அம்மா கூறினார்.

நான் ஒருவருடன் டேட்டிங் செய்கிறேன் என்றால், நான் ஒருவருடன் டேட்டிங் செய்கிறேன் என்று சொல்வேன். இதன் மூலம் என்னை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது தான் நான், நான் என் சொந்த விதிமுறைகளின்படி என் வாழ்க்கையை நடத்துகிறேன்.” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய மனிஷா “அந்த நாட்களில் ஹீரோக்களுக்குப் பல தோழிகள் இருப்பார்கள். ஆனால் நடிகைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதிகள் இருந்த. அந்த நேரத்தில் நான் என் ஆண் நண்பர்களுடன் வெளியே சென்றேன். நான் டேட்டிங் செய்வதற்கு எளிய பெண் என்ற தவறான கருத்து நிலவியது.

ஆனால் இந்த உறவுகள் என் தொழில் வாழ்க்கையை ஒருபோதும் அழிக்கவில்லை. அவை என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் என்று நினைக்கிறேன். அப்போது பல ஹீரோயின்கள் ஹீரோக்களுடன் உடலுறவு வைத்திருந்தார்கள். ஆனால் எங்களை இதுவரை யாரும் தொடவில்லை என்று பொய் சொன்னார்கள். ஆனால் எனக்கு அவர்களைப் போல் பொய் சொல்லத் தெரியாது” என்று கூறினார்.

எனக்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது அல்லது எனக்கு ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் என்பதற்காக நான் என் தொழில் வாழ்க்கையில் தவறாக இருக்கப் போகிறேன் என்று அர்த்தமல்ல. நான் என் வேலையை விரும்புகிறேன். ஆனால் நடிகைகளுக்கான சில தவறான மதிப்புகள் இருந்தன. அது எனக்கு நன்றாகப் பொருந்தவில்லை” என்று தெரிவித்தார்.

1989-ம் ஆண்டு வெளியான பெரி பெடவுலா நேபாளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. 1991-ம் சௌதாகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவியத்தொடங்கியது.மணிரத்னம் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான பாம்பே படத்தின் மூலம் தமிழிலும் மனிஷா கொய்ராலா அறிமுகமானார்.

தொடர்ந்து இந்தியன், உயிரே, முதல்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். பாலிவுட்டில் பல வெற்றி படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீரமாண்டி மல்லிகாஜான் என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மனிஷா கொய்ராலாவின் நடிப்புக்கு ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஹிந்தி, தமிழ் தவிர பெங்காலி, மலையாளம், கன்னடம் மற்றும் நேபாளி திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *