எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு!

Advertisements

I.N.D.I.A alliance | No Confidence Motion | Lok Sabha | Narendra Modi | Manipur Violence

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது…

டெல்லி : மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மழைக்கால கூட்டத்தொடரின் 9-வது நாளான இன்று அவை கூடிய உடன் மணிப்பூர் விவகாரம்குறித்து விவாதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் மக்களவையை மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

I.N.D.I.A alliance | No Confidence Motion | Lok Sabha | Narendra Modi | Manipur Violence | Adjourned

அதேவேளை, மணிப்பூர் விவகாரம்குறித்து விவாதிக்க வேண்டுமென 60 நோட்டீஸ் கொடுக்கப்பட்டபோது சபாநாயகர் அனுமதிக்கவில்லையெனக் கூறி மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *