ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்களுக்கு தடை!

Advertisements

76th Independence Day | Chennai Airport | Alert

நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்களுக்கு தடையென உளவுத்துறை ஏச்சரிக்கை விடுத்துள்ளது…

சென்னை: நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களைப் பிரதான நுழைவு வாயிலில் நிறுத்திச் சந்தேகம்படும் படியான வாகனங்களை மோப்பநாய் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டு வருகின்றனர். மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் கார்களை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிடுகின்றனர். இதே போன்று விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான சோதனைகளுடன் விமானத்தில் ஏறும் இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

76th Independence Day | Chennai Airport | Alert | Intelligence | Jam Pickle Halwa | Ban

குறிப்பாகக் கையில் எடுத்து வரும் பைகளைத் திருவி திருவி சோதிக்கின்றனர். திரவ பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்றவற்றை கையில் எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சோதனை காரணமாகப் பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் வர அறிவுத்தப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி நள்ளிரவு வரை இந்தப் பாதுகாப்பு விதி முறைகள் அமலில் இருக்கும் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *