மணிப்பூரில் மாற்று அரசு அமைக்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

 மணிப்பூரில் மாற்று அரசு அமைக்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பின் தலைவர் கைது செய்யபட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து மெய்தி இன மக்கள் தங்கள் தலைவரை விடுவிக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த 5 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது.
இந்நிலையில், நள்ளிரவிலும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இம்பால்  மாவட்டத்தில்  யாய்ரிபோக் துலிஹலில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.
இதனால் கட்டிடத்தின் ஒருபகுதி எரிந்து சேதமடைந்ததுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டம் குவாகிதெல், சிங்ஜமேய் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் மாற்று அரசு அமைக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *