Mangadu Municipality: நகராட்சியின் அலட்சியம்.. துருபிடித்து நாசமாகும் கடைகள்!

Advertisements

மாங்காடு நகராட்சிமூலம் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்காமல் நீண்ட நாட்களாகக் குப்பை கொட்டக்கூடிய காலி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளதால் கடைகள் அனைத்தும் துருபிடித்து, கடைகள் சேதமாகியும் ஆங்காங்கே உடைந்து தூசி மண்டி மக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்ககூடிய நடுத்தர மக்கள், மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு நகராட்சி சார்பில் நடமாடும் கடையை இலவசமாக வழங்கப் பல லட்சம் மதிப்பீட்டில் கடை உருவாக்கபட்டுள்ளது. அந்த நிலையில் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்காமல் நீண்ட நாட்களாகக் குப்பை கொட்டக்கூடிய காலி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளதால் கடைகள் அனைத்தும் துருபிடித்து, கடைகள் சேதமாகியும் ஆங்காங்கே உடைந்து தூசி மண்டி மக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது.

மேலும் கடைகள் வைக்கப்பட்டுள்ள இடம் முழுவதிலும் புதார் மண்டியுள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் கடைக்குள் உள்ளே இருக்கக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்பீட்டில் மக்களின் வாழ் வாதாரத்திற்காகச் செலவு செய்து கடையை வழங்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாகத் துருப்பிடித்து சேதம் ஆகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.எனவே உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கடையைக் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *