IND Vs ENG 5th Test: புதிய வரலாறு படைத்த ஆண்டர்சன்!

Advertisements

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திப் புதிய வரலாறு படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. அந்த அணியின் மிகப்பெரிய பலமாக இருப்பவர் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வரும் 41 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் இன்றும் இளவயது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இணையாகப் பந்து வீசி வருகிறார்.

இந்தியாவிற்கு எதிரான தொடர் தொடங்கும்போதே ஆண்டர்சன் இந்தத் தொடரில் 700 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் டெஸ்டில் ஆடாத ஆண்டர்சன் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். ஆனாலும், அந்தப் போட்டிகளில் பெரியளவில் சோபிக்கவில்லை.

இந்த நிலையில், தரம்சாலாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் – பும்ரா களமிறங்கினர். குல்தீப் அப்போது, 9வது விக்கெட்டாகக் குல்தீப் யாதவை ஆண்டர்சன் அவுட்டாக்கினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திப் புதிய வரலாறு படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் தற்போது 3வது இடத்தில் உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *