
காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷே விழா வெகு விமர் சியாக நடைபெற்றது. ராஜகோபுரங்களுக்கும் மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கும் மங்கள மேள வாத்தியங்களுடன் எடுத்துச் சென்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில். திருமால், பிரம்மன், சூரியன், பைரவர், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் பலவும் இங்குள்ள சிவபெருமானை வழிபட்ட வரலாற்று சிறப்புக்கு உரியது இத்திருக்கோயில்.
இக்கோயில் கும்பாபிஷேகம் இதற்கு முன்பு 13.6.1954 மற்றும் 10.6.2005ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தற்போது இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக ரூபாய் 3 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் 33யாகசாலைகள் அமைக்கப்பட்டு அதில் 160 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை செய்தனர்.
யாகசாலை பூஜைகள் ஆலய அர்ச்சகர் கே. வி. சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்றன யாகசாலை பூஜைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கின. மறுநாள் திங்கட்கிழமை கோ. பூஜை, தனபூஜை ஆகியனவும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை ராஜகோபுரங்களுக்கும் மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கும் மங்கள மேள வாத்தியங்களுடன் எடுத்துச் சென்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலயம் முழுவதும்வண்ணவிளக்குகளால்அலங்


