Bus Accident: தமிழக – கேரள அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கேரளா அரசு பேருந்தும் தமிழக அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரு ஓட்டுனர்கள் உட்பட 50க்கும்  மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து கேரளா அரசுப் பேருந்துப் பயணிகளை ஏற்றிகொண்டு திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது, இதேபோல் திருவனந்தபுரத்திலிருந்து தமிழக அரசு பேருந்தும் பயணிகளை ஏற்றிக் கொண்டு நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்தது, இருபேருந்துகளும் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்துகொண்டிருத்தபோது திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற கேரளா அரசுப் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது,

அப்போது எதிர்பாராத விதமாகத் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழக அரசு பேருந்தில்  நேருக்கு நேர் மோதியது, இந்த விபத்தில் இருபேருந்துகளின் முன்பகுதிகள் சுக்குதூறாக உடைந்தது, மேலும் இந்த விபத்தில்   படுகாயமடைந்த இரு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளை அப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள்  மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனையில்  சிகிட்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இந்த விபத்துகுறித்து வழக்குப் பதிவு செய்த மார்த்தாண்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் மேம்பாலத்தில் விபத்து ஏற்படட்ட பேருந்துகளை மீட்பு வாகனங்கள்மூலம் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர், இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத்தால் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில்  போக்குவரத்து தடைபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *