மருத்துவரை கத்தியால் குத்தியவருக்கு ஜாமீன் மறுப்பு!

சென்னை: 

கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, கடந்த 13-ம் தேதி விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். அவரைச் சக பணியாளர்கள், பொதுமக்கள் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, “மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஆயுதம் எடுத்து வந்து, விக்னேஷ் தாக்குதல் நடத்தியுள்ளார். விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது” எனக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *