malavika mohanan:செக்கச் சிவந்த சேலையில்…ஸ்ட்ராபெரி பெண்ணாக மிளிரும் தங்கலான் நாயகி!

Advertisements

சிவப்பு நிற சேலையில் சிம்ரன் போல் விதவிதமாகப் போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனனின் கலர்புல்லான கார்ஜியஸ் போட்டோஸ் இதோ.

கேரளாவிலிருந்து கோலிவுட் வந்து பேமஸ் ஆன நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்தின் வெற்றிக்குப் பின்னர் மாளவிகாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. மாஸ்டர் படமும் ஹிட்டானதால் கோலிவுட்டில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தார் மாளவிகா. இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த அவர், தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.

தங்கலான் திரைப்படத்தில் ஆராத்தி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் மாளவிகா. இந்தக் கதாபாத்திரத்திற்காக உடல் எடையைக் குறைத்ததோடு, சிலம்பமும் கற்று நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர விடுமுறையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

தங்கலான் படம் தவிர நடிகை மாளவிகா மோகனன் கைவசம் தமிழில் சர்தார் 2 படமும் உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார் மாளவிகா. இதுதவிர தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக ராஜாசாப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது பான் இந்தியா படமாக உருவாகிறது.

இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வரும் அவர், இன்ஸ்டாவிலும் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தங்கலான் புரமோஷனின்போது டார்க் ரெட் கலர் சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *