
நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. அப்புகைப்படங்களை இங்குக் காணலாம்.
நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இவரது நடிப்பில் கடைசியாகத் தங்கலான் மற்றும் யுத்ரா படங்கள் வெளியானது.
இந்த இரண்டு படங்களிலும் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாகத் தங்கலானில் காவல் தெய்வமாக நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு பெரும் கவனத்தைப் பெற்றது மட்டுமில்லாமல் பாராட்டுகளையும் பெற்றது.

நேரடி இந்திப் படமான யுத்ராவில் இவரது கிளாமர் காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்தப் படத்தில் போதும் போதும் எனச் சொல்லும் அளவிற்கு கிளாமரில் ஸ்கோர் செய்திருந்தார்.
மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் மாஸ்டர், மாறன், தங்கலான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தான் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிரும் பழக்கம் கொண்டவர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 4.2 மில்லியன் ரசிகர்கள்பின் தொடருகின்றனர்.
இவர் தற்போது மாடர்ன் ட்ரஸ் அணிந்து கொண்டு அட்டகாசமான போஸ்கள் கொடுத்துப் புகைப்படங்கள் எடுத்துத் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், மாளவிகா மோகனன் மனதார கிளாமர் போஸ் கொடுத்து அசத்துறாங்களேயெனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

