Shakuntala Devi: பிறந்த நாள்!

Advertisements

இந்திய  கணிதமேதை சகுந்தலா தேவியின் பிறந்த நாள்!

இந்திய கணிதமேதை சகுந்தலா தேவி பெங்களுருவில் நவம்பர் 4, 1929 -ஆம் ஆண்டு பிறந்தார்.  1982-ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர்.மனித கணினி, மனக் கணக்கு வல்லுநர் போன்ற பட்டப் பெயர்கள் பெற்ற மாபெரும் கணித மேதை. கணிதவியலாளர், வானவியலாளர்.

Advertisements

இவர் பெங்களூரில் பிறந்தவர். தந்தை ஒரு  `பிராமணர் சர்க்கஸ்” கம்பெனியில்   பணிபுரிந்தார். விளையும் பயிர் முளையிலே என்பது போல அவருக்கு மூன்று வயது இருந்த போது, அவள் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்த பொழுதே அவள் கணிதத் திறன் புலப்பட்டது. இவரது கணித திறமையை கண்ட இவரது தந்தை தன் சர்க்கஸ் வேலையை விட்டுவிட்டு சகுந்தலாவின் கணித திறனை தெருக்களில் நிகழ்த்தி காட்டினார். சகுந்தலாவால் எந்த ஆரம்பக் கல்வியும் இல்லாமலே இத்தகைய கணித திறனை வெளிப்படுத்த முடிந்தது.

அவருக்கு ஆறு வயது இருந்த போது மைசூர் பல்கலைக்கழகத்தில் அவரது கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை வெளிப்படுத்தினார். எட்டு வயதில் அவர் அதையே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்து வெற்றி பெற்றார்.

1944 ல் தன் தந்தையுடன் லண்டன் சென்ற சகுந்தலா 1960 ன் மத்தியில் இந்தியா திரும்பினார். கொல்கத்தாவை சேர்ந்த பரிடோஸ் பேனர்ஜி என்னும் IAS அதிகாரியை மணந்தார். இவர்களுக்கு 1979 ல் விவாகரத்து ஆனது. 1980-ஆம் ஆண்டு ஜூன் 18-ல் இம்பீரியல் கல்லூரி, லண்டன் கணினி துறை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 13 இலக்க எண்ணை 13 இலக்க எண்ணால் பெருக்கல் செய்து28 விநாடிகளில் சரியான விடையைக் கூறி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இவரின் பிறந்த நாளான நவம்பர்4,2013-ஆம் ஆண்டு கூகுல் நிறுவனம் தனது முகப்பு புத்தகத்தில் சகுந்தலா தேவியின் படத்தத்தை வெளியிட்டு அவருக்கு மரியாதையை செய்தது. .a good mathematic genius….

சகுந்தலா தேவி தனது கணித திறனை காண்பிப்பதற்காக, உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். இவற்றில் 1950-ஆம் ஆண்டு ஐரோப்பா மற்றும் 1976-ஆம் ஆண்டு நியூயார்க் பயணம் மேற்கொண்டார்.

1988ல் ஆர்தர் ஜென்சென் என்ற கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் பேராசிரியர் தேவியின் கணித திறனை பரிசோதித்தார். அவற்றில் பெரிய எண்களை கொண்ட கணக்குகளும் அடக்கம். உதாரணமாக 61,629,875 என்ற எண்ணின் கன மூலமும்,  170,859,375 என்ற எண்ணின் ஏழாவது மூலமும் கேட்கப்பட்டன. இதில் விந்தை என்னவெனில் ஆர்தர் கேள்வியை தேவியிடம் கேட்டுவிட்டு அவரது நோட்டு புத்தகத்தில் கேள்வியை குறிப்பதற்குள் தேவி பதிலை துல்லியமாக சொன்னது கண்டு வியந்து போனார். 1990ல் ஆர்தர் தனது ஆய்வின் முடிவை intelligence என்ற கல்வி இதழில் வெளியிட்டார்..

சகுந்தலா தேவி ஜோதிடத்திலும் தேர்ந்தவர் ஆவார். இவர் சமையல் குறிப்பு, கற்பனை நாவல்கள், புதிர் புத்தகங்கள் பலவற்றை எழுதி உள்ளார். கணித மேதை சகுந்தலா தேவி தான் இந்தியாவில் முதல் முதலில் ஒரு பால் ஈர்ப்பை பற்றி மிகவும் வெளிப்படையாக  “The World of Homosexuals” எனும் புத்தகத்தை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார்.  ஏப்ரல் 21,2013-ஆம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் 83 வயதில் இறந்தார். அவருக்கு அனுபமா பானர்ஜி என்ற மகள் உள்ளார். அவரை நினைவு கூர்வதில் ஜெம் டிவி பெருமை கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *