Makkaludan Mudhalvar Scheme: 60 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன.. மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

30 நாட்களில் 3.50 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள்மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுவரை 60 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை:சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் 1598 பேருக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, நீர்வளத்துறை, வேளாண்மைத் துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 1,598 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் “மக்களுடன் முதல்வர்”ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காகப் போராடுவோம், வாதாடுவோம். ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவோம்.

“மக்களுடன் முதல்வர்” திட்டம்மூலம் அரசுச் சேவைகளைப் பெற அலைய தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி அரசு இயந்திரம் செல்கிறது.மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் திட்டம் தான், “மக்களுடன் முதல்வர்”

30 நாட்களில் 3.50 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள்மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
இதுவரை 60 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *