Maharashtra election:முதல் மந்திரியாக யாரை அறிவித்தாலும் ஆதரவு: திடீரென மனம்மாறிய உத்தவ் தாக்கரே!

Advertisements

மும்பை:மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

முதல் மந்திரி வேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பாகக் கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த முடிவு எட்டப்படாமல் இருந்தது.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல் மந்திரி வேட்பாளர் யார் என்பதை மகா விகாஸ் அகாடி கூட்டணி முடிவு செய்யும்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) முதல் மந்திரி வேட்பாளராக யாரை அறிவித்தாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு.

ஏனென்றால் மகாராஷ்டிரா மக்களைக் காப்பாற்ருவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *