
தமிழ்நாடு அரசு சார்பில் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பது உரிமைத் தொகையா? அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வினவியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சில மாதங்களில் மீதமுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஏமாற்ற முயல்வது ஏன்? என்று வினவியுள்ளார்.
ஆட்சிக்கு வருமுன் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைத்ததும் “தகுதியற்றவர்கள்” என்று சிலரை முத்திரை குத்துவது தான் திமுகவின் சமத்துவமா? என்று வினவியுள்ளார்.
இத்திட்டத்தின் பயனாளிகளை அநாகரிகமாக விமர்சித்துத் திமுகவினர் புளகாங்கிதம் அடையும் வேளையில், இது உண்மையிலேயே மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா? என்றும் வினவியுள்ளார்.
ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகக் கடந்த நான்காண்டுகளில் பல்லாயிரம் முறை ஏமாற்றிய திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


