
எடப்பாடி பழனிச்சாமி நம்பகத் தன்மையற்றவர் என்றும், அவர் விஜயின் தலைமையை ஏற்கத் தயாராகி விட்டதாகவும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அதிமுகவுடன் தவெக கூட்டணி சேர வாய்ப்புள்ளதா? என்று வினவினர். இதற்குப் பதிலளித்த தினகரன், எடப்பாடி பழனிச்சாமி நம்பகத் தன்மையற்றவர் என்றும், அவர் தவெகவுடன் கூட்டணி சேருவதற்கு மட்டுமல்லாமல் விஜயின் தலைமையை ஏற்கத் தயாராகி விட்டதாகவும் தெரிவித்தார்.



