Magalir Urimai Thogai Scheme: நாளையுடன் நிறைவு!

Advertisements

Magalir Urimai Thogai Scheme

நாளையுடன் நிறைவு பெறும் சிறப்பு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு முகாம்…

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவு பெறுகிறது.
கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய சிறப்பு முகாம்கள் 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. விடுப்பட்டவர்களுக்கு நேற்று முதல் சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை)யுடன் சிறப்பு முகாம்கள் நிறைவடைவதால் இதுவரையில் மனு கொடுக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 கட்ட முகாம்களிலும் விண்ணப்பிக்காத ஒரு சிலர் மட்டுமே தற்போது முகாம்களில் மனு கொடுத்து வருகின்றனர்.

சென்னையில் இதுவரையில் 12 லட்சம் பெண்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *