World Photography Day 2023 | M.K. Stalin
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட தினத்தைக் கொண்டாடும் வகையில் புகைப்பட கலைஞர்களைப் புகைப்படம் எடுத்து உலக புகைப்பட தினத்தைக் கொண்டாடினார்…

சென்னை: உலக புகைப்பட தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள புகைப்பட கலைஞர்கள் மற்றும் புகைப்பட ரசிகர்கள், விரும்பிகள் வித்தியாசமான புகைப்படங்கள் எடுத்து இந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு இன்று உலக புகைப்பட தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட தினத்தைக் கொண்டாடும் வகையில் புகைப்பட கலைஞர்களைப் புகைப்படம் எடுத்து உலக புகைப்பட தினத்தைக் கொண்டாடினார்.
மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நிகழ்வுகளை உறைய வைத்தும் – நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்! என்று பதிவிட்டுள்ளார்.
