“இது வெறும் டிரெய்லர் தான்” – சி.விஜயபாஸ்கர் முழக்கம்!

மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது 10,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர்.

விழாவில் பேசிய சி.விஜயபாஸ்கர், “தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தியும், அதிமுக தலைமை அதற்குச் செவிசாய்க்கவில்லை. மாறாக, ‘தீய சக்தி’யான திமுகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “முதலமைச்சர் விஜய்யின் தலைமையின் கீழ் தொடர்ந்து பணியாற்றுவோம். இன்று நீங்கள் பார்த்தது வெறும் டிரெய்லர் தான், டெல்டாவில் நடக்கப்போவது தான் மெயின் பிக்சர். டெல்டாவில் மிகப்பெரிய இணைப்பு விழாவை நடத்தி காட்டுவோம்” எனச் சவால் விடுத்தார். மேலும் காவிரி-குண்டாறு திட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரங்களில் தவெக உறுதியாகச் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *