madurai:அவன் கூடப் பழகாதனு சொன்னா கேக்க மாட்டியா? சகோதரியைக் கொன்று தொங்விட்ட அண்ணன்!

மதுரையில் சகோதரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தங்கையைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட நபர் தலைமறைவு.

மதுரை மாவட்டம் கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இருக்கு தமிழ்ராஜ் (வயது 41) என்ற மகனும், திலகவதி (32) என்ற மகளும் இருந்தனர். தமிழ்ராஜ் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவந்தார். திலகவதிக்கு கண்ணன் என்பவருடன் திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே கண்ணன் இராணுவத்தில் பணியாற்றிவரும் நிலையில், திலகவதிக்கு ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவருடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் சகோதரர் தமிழ்ராஜ்க்கு தெரியவரவே திலகவதியை கண்டித்துள்ளார். மேலும் ராகவேந்திரன் உடனான தொடர்பை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும் கராராகத் தெரிவித்துள்ளார். ஆனால், இதனைப் பொருட்படுத்தாத திலகவதி தனது உறவைத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் திலகவதி, தமிழ்ராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், திலகவதியை கடுமையாகத் தாக்கிய தமிழ்ராஜ் அவரது கழுத்தில் கயிற்றை இறுக்கில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திலகவதி துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த கீரைத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *