மதுரை விளாச்சேரி கொலு பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு.!

மதுரை மாவட்டம் பசுமலையை அடுத்து மூலக்கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விளாச்சேரி கிராமம்,கொலு பொம்மைகளுக்கு கிடைத்துள்ள மத்திய அரசின் புவிசார் குறியீட்டினால் விளாச்சேரியில் உள்ள கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு வழிவகை செய்யும்.

பல்வேறு சமூகங்களைச் சார்ந்த 6 ஆயிரம் மக்கள் வசித்து வரும் நிலையில்,இங்குள்ள ஏராளமான குடும்பங்கள் குறிப்பாக பெண்கள் களிமண் பொம்மைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்;, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு அடி முதல் பல அடிகள் வரை உயரம் கொண்ட பிரமாண்ட விநாயகர் சிலைகள் என இங்கு செய்யப்படும் பொம்மைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

இதுகுறித்து கிராமத்தின் மூத்த கைவினைக் கலைஞரும், சங்கத்தின் முதல் நிலை ஆலோசகருமான ராமலிங்கம் கூறும்போது,விளாச்சேரியில் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக களிமண் பொம்மைகள் செய்து வருகினறனர்.

இதனால்,இன்றைய இளைய தலைமுறையினரும் களிமண் பொம்மைத் தொழிலை மேற்கொள்ளும் வாய்ப்பையும் உருவாகியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *