
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், “மீண்டும் கிராமங்களை நோக்கி ” என்ற தலைப்பில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூனாம்பேடு கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், “மீண்டும் கிராமங்களை நோக்கி ” என்ற தலைப்பில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கினார்.
மேலும்,அரசாங்கம் நீங்கள் நல்லா குடியுங்கள், அதை வைத்துதான் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க முடியும் என சொல்கிறது. ஆனால், நாங்கள் ஒரு சொட்டு மது இருக்கக் கூடாது என பேசி வருகிறோம், என்று அவர் மதுக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், இளம் தலைமுறையினர் கஞ்சாவுக்கு அடிமையானாள் மீள முடியாது என எச்சரித்தார்.தனது அரசியல் வாழ்வு முழுக்க போராட்டங்களாலேயே ஆனது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இதனைத்தொடர்ந்து, நான் எந்த பதவிக்கும் போக விரும்பவில்லை,பெண்களைப் பார்த்து இந்த ஆட்சியை எங்களிடம் கொடுத்துவிட்டால்,உங்களுக்கு எல்லா வரமும் சட்டம் மூலமாக செய்து தருகிறோம்,” என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்


