madonna sebastian:கடற்கரையில் அமர்ந்து ஹாட் போஸ்.. விஜய் பட நடிகையா இது? அசந்து போன ரசிகர்கள்..!

Advertisements

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன் தற்போது கடற்கரையில் அமர்ந்து ஹாட் போஸ் கொடுக்கும் போட்டோக்களைப் பதிவிட்டுள்ளார்.

மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். இந்தப் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதைத் தொடர்ந்து காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் மடோனா. இந்தப் படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் சராசரி வெற்றியை இந்தப் படம் பதிவு செய்தது.

தமிழில் மீண்டும் கவண் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கே.வி ஆனந்த் இயக்கிய இந்தப் படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது.

பின்னர் தனுஷ் இயக்குனராக அறிமுகமான பவர் பாண்டி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்தப் படமும் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது.

இதனிடையே மலையாள திரையுலகிலும் மடோனாவுக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இப்லிஸ், வைரஸ், பிரதர்ஸ் டேயெனப் பல வெற்றி படங்களில் நடித்தார்.

மேலும் தமிழில் வானம் கொட்டட்டும், கொம்பு வச்சம் சிங்கம் டா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக லியோ படத்தில் மடோனா நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் விஜய்யின் சகோதரியாக அவர் நடித்திருப்பார். இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாகும். மடோனா தற்போது அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மடோனா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் அமர்ந்து ஹாட் போஸ் கொடுக்கும் போட்டோக்களைப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. படங்களில் பெரிய அளவில் கவர்ச்சி காட்டாமல் டீசெண்டாக நடிக்கும் மடோனா இப்படி கிளாமர் போஸ் கொடுக்கிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *