M. K. Stalin Meet Novak Djokovic: டென்னிஸ் வீரருடன் முதலமைச்சர் ஸ்டாலின் பயணம்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், அவர் சென்ற விமானத்தில் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்(செர்பியா) பயணம் செய்துள்ளார். அப்போது அவருடன் எடுத்த படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

2030க்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே இலக்காகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன் தினம் இரவு சென்னையிலிருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார். இன்று ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

இதற்கிடையே முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் செய்த விமானத்தில் செர்பியா நாட்டு டென்னிஸ் வீரர்  நோவக் ஜோகோவிச் பயணம் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை 10முறை வென்றவரும். நடப்பு சாம்பியனும், உலகின் நெம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் ஆவர், இவர் தற்போது ஆஸி ஓபனில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் முதல் தடவையாக அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அடைந்தார்.

இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆகாயத்தில் ஆச்சர்யம் என நோவக் ஜோகோவிச்சை சந்தித்த புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *