
திருப்பூரில் சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து…. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
திருப்பூர்: பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து….
சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் 54 இவர் நேற்று பல்லடத்தில் இருந்து மாணிக்காபுரம் செல்ல கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வலது புறம் திரும்பி மாணிக்கபுரம் சாலையில் செல்ல முயன்றுள்ளார் அப்போது கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற இரும்பு லோடு ஏற்றி செல்லும் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த முருகானந்தம் சீல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

